மகனின் கனவை நனவாக்க துபாய்க்கு குடியேறிய நடிகர் மாதவன்!


மகனின் கனவை நனவாக்க துபாய்க்கு குடியேறிய நடிகர் மாதவன்!
x
தினத்தந்தி 23 Dec 2021 3:48 PM IST (Updated: 23 Dec 2021 4:42 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் மாதவன் தனது குடும்பத்தினருடன் துபாயில் குடியேறி உள்ளார்.

துபாய்,

பெண்களின் மனதை கொள்ளையடித்த நடிகர் மாதவன், இப்போது குணசித்திர வேடங்களிலும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் மாதவனின் மகன்,  சினிமா துறையில் சேராமல் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள உள்ளார்.அவர் ஒரு நீச்சல் சாம்பியன் ஆவார். பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று குவித்தவர்.

மாதவனின் மகன் வேதாந்த்  தனது 16 வயதிலேயே ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு பயிற்சி பெற்று வருகிறார்.அவரது குடும்பத்தினர் அவருக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.

நடிகர் மாதவன் தன்னுடைய மகனின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் துபாயில் குடியேறி உள்ளார்.

இதுகுறித்து நடிகர் மாதவன் கூறியுள்ளதாவது, “என்னுடைய தொழிலை விட என் மகனின் கனவு தான் எனக்கு முக்கியம். மும்பையில் இருக்கும் பெரிய நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளதால் துபாய் சென்றுள்ளோம்” என்று மாதவன் தெரிவித்துள்ளார். 

வேதாந்த், மராட்டிய மாநிலத்திற்காக நீச்சல் போட்டிகளில் பங்கேற்று 7 பதக்கங்களை வென்றுள்ளார்.தேசிய இளையோர்  நீச்சல் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று அதிலும் பதங்களை வென்றுள்ளார். அதில் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.

தன்னுடைய 12வது வயதில் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் பங்கேற்று அவர் பதக்கம் பெற்றவர்.இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகர் மாதவன், “சர்வதேச நீச்சல் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக தனது முதல் பதக்கம் வென்ற மகனை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். 

‘மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்’ - எனும் தெய்வப்புலவரின் வாக்குக்கு இணங்க வேதாந்த் தந்தை மாதவனுக்கு பெருமை தேடி தந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

Next Story