உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் டீசர் வெளியானது..!
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிக்கிள் 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், ‘பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.02.2022) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவால் டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
It’s time to fight for what’s right! Catch the official teaser of #NenjukkuNeedhi in cinemas and online!https://t.co/5j9hExON0v@ZeeStudios_@BoneyKapoor@BayViewProjOffl#RomeoPictures@mynameisraahul@Arunrajakamaraj@actortanya@Aariarujunan@dineshkrishnanb@dhibuofficial
— Udhay (@Udhaystalin) February 11, 2022
Related Tags :
Next Story