விஜய்யுடன் நடிக்கும் ஷாம்


விஜய்யுடன் நடிக்கும் ஷாம்
x
தினத்தந்தி 26 April 2022 3:40 PM IST (Updated: 26 April 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

தளபதி 66 படத்தில் நடிகர் ஷாம் விஜய்யின் அண்ணனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கோண்டு இருக்கிறது. அடுத்து வம்சி இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதில் விஜய்யின் சகோதரராக 1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதை மோகன் மறுத்தார். 

இந்நிலையில், விஜய்யின் சகோதரராக ஷாம் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 2-ந் தேதி ஐதராபாத்தில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் ஷாம் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. ஷாம் ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000-ல் வெளியான ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பராக நடித்து இருந்தார். 12பி, லேசா லேசா, இயற்கை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். விஜய்யின் 66-வது படம் குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.


Next Story