தோல்வி அடைந்த சமந்தா படத்துக்கு 4 சர்வதேச விருதுகள்


தோல்வி அடைந்த சமந்தா படத்துக்கு 4 சர்வதேச விருதுகள்
x

சமந்தா நடித்து அதிக பட்ஜெட்டில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எதிர்பார்ப்போடு வந்த சாகுந்தலம் புராண படம் படுதோல்வி அடைந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரூ.60 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.10 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இதில் சமந்தா சகுந்தலை வேடத்திலும், தேவ்மோகன் துஷ்யந்தனாகவும் நடித்து இருந்தனர்.

படம் தோல்வியானதும் சமந்தாவுக்கு எதிராக வலைத்தளத்தில் விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் ரசிகர்கள் வரவேற்பை பெறாத நிலையிலும் சாகுந்தலம் படத்துக்கு வெளிநாட்டு பட விழாக்களில் விருதுகள் வரிசை கட்டுகின்றன. ஏற்கனவே நியூயார்க் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் 'பெஸ்ட் பேண்டசி பிலிம், பெஸ்ட் மியூசிக்கல் பிலிம்' விருதுகளை வென்றது. தற்போது பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த பேண்டசி பிலிம், பெஸ்ட் காஸ்ட்யூம் டிசைன், பெஸ்ட் இந்தியன் பிலிம் என நான்கு சர்வதேச விருதுகளை சாகுந்தலம் பெற்றுள்ளது.

இந்த தகவலை படக்குழுவினர் வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளனர். சிலர் வாழ்த்தியும், இன்னும் சிலர் இந்த படத்துக்கெல்லாம் விருதா? என்று விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.


Next Story