வலைதளத்தில் வைரல்... மகளுடன் கஜோல் எடுத்த புகைப்படம்


வலைதளத்தில் வைரல்... மகளுடன் கஜோல் எடுத்த புகைப்படம்
x

தமிழில் பிரபுதேவாவின் மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜோல். இந்த படத்தில் அவரது 'பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை' பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தனுசின் வேலையில்லா பட்டதாரி படத்தில் குணசித்திர வேடத்தில் வந்தார்.

இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இந்தி நடிகர் அஜய் தேவ்கனை 1999-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 19 வயதில் நைசா என்ற மகள் இருக்கிறார்.

கஜோல் இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இயங்கி வருகிறார். தனது புகைப்படங்களை தொடர்ந்து அதில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் மகள் நைசாவுடன் புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் கஜோல் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாகிறது. நைசாவும் விரைவில் சினிமாவில் நடிக்க வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

1 More update

Next Story