கன்னட சின்னத்திரை நடிகர் மீது இளம்பெண் பாலியல் புகார்


கன்னட சின்னத்திரை நடிகர் மீது இளம்பெண் பாலியல் புகார்
x

கன்னட சின்னத்திரை நடிகர் மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு,

கன்னட சின்னத்திரை நடிகராக இருப்பவர், வருண் ஆராதியா. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏறப்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். அப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு(2023) இளம்பெண், வருண் ஆராதியாவின் செல்போனை எடுத்து பார்த்தார். அப்போது அவர் மேலும் சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் செல்போனில் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் வருண் ஆராதியாவைவிட்டு பிரிந்து சென்றார்.

தற்போது வருண் ஆராதியா, இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது தன்னுடன் காதலை தொடரவில்லை என்றால், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், பசவேஸ்வராநகர் போலீசில் வருண் ஆராதியா மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வருண் ஆராதியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story