அரசியல் கதையில் அமீர்


அரசியல் கதையில் அமீர்
x

அரசியல் கதையம்சம் கொண்ட படத்தில் டைரக்டர் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார் .

பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள டைரக்டர் அமீர், தற்போது `உயிர் தமிழுக்கு' என்ற பெயரில் தயாராகும் படத்திலும் நாயகனாக நடித்து இருக்கிறார். இதில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆதம் பாவா தயாரித்து டைரக்டு செய்துள்ளார். அரசியல் கதையம்சத்துடன் தயாராகி உள்ள இந்தப் படத்தின் வசனத்தை பாலமுரளி வர்மன், அஜயன்பாலா எழுதி உள்ளனர். `மாநாடு', `ஜி.வி.2' படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தற்போது `ஏழுகடல் ஏழுமலை', சமுத்திரக்கனி நடிக்கும் `ராஜாகிளி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இவர் `உயிர் தமிழுக்கு' படத்தை வெளியிடுகிறார். இசை: வித்யாசாகர், ஒளிப்பதிவு: தேவராஜ். பாடல்: பா.விஜய்.

1 More update

Next Story