யார்டா நீ...! 'ஜப்பான்' ... மேட் இன் இந்தியா...! பிறந்தநாளில் கார்த்தி வீடியோ வைரல்


யார்டா நீ...! ஜப்பான் ... மேட் இன் இந்தியா...! பிறந்தநாளில் கார்த்தி வீடியோ வைரல்
x

கார்த்தி, ஜோக்கர், ஜிப்சி, குக்கூ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை

பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கார்த்தி, ஜோக்கர், ஜிப்சி, குக்கூ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இது கார்த்தியின் 25வது படமாகும்.இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.

தெலுங்கில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாகவும், வில்லனாகவும் புகழ் பெற்ற நடிகர் சுனில் இந்தப் படத்தின் மூலம் தமிழில் களமிறங்குகிறார். அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' படத்தில் 'மங்கலம் சீனு' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் பெற்றவர் நடிகர் சுனில்.

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் உலக கவனத்தை ஈர்த்த ரவிவர்மன் ஒளிப்பதிவாளர்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கார்த்தி பிறந்தநாளான இன்று ரசிக்ரகளுக்காக ஜப்பான் படத்தின் டீசரை நடிகர் சிம்பு இணையத்தில் வெளியிட்டுள்ளார். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் சிலருக்கு ஹீரோ, சிலருக்கு வில்லன், சிலருக்கு காமெடியன். ஆக மொத்தத்தில் இந்த மேட் இன் இந்தியா ஜப்பான் ஒரு ஆல் ரவுண்டர் என்பது அந்த அறிமுக வீடியோவில் இருந்து தெரிகிறது.




Next Story