நடிகர் நரேனுக்கு ஆண் குழந்தை


நடிகர் நரேனுக்கு ஆண் குழந்தை
x

நரேன்-மஞ்சு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலையும் நரேன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

தமிழில் 'சித்திரம் பேசுதடி', 'நெஞ்சிருக்கும் வரை', 'பள்ளிக்கூடம்', 'அஞ்சாதே' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நரேன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி', 'விக்ரம்' போன்ற படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

நரேன் கடந்த 2007-ம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்மையா என்ற பெண் குழந்தை உள்ளது. மகளுக்கு தற்போது 14 வயதாகும் நிலையில் நரேன் மீண்டும் தந்தையாகி இருக்கிறார்.

சமீபத்தில் தனது திருமண நாளின்போது மனைவி கர்ப்பமாக உள்ள தகவலை 'டுவிட்டர்' மூலம் நரேன் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் நரேன்-மஞ்சு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலையும் நரேன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். குழந்தையின் பிஞ்சு விரல்கள் தனது கை விரலை பிடித்தபடி உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். நரேனுக்கு திரையுலகினரும் ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

1 More update

Next Story