நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு இனி இசையமைக்க மாட்டேன்- இசையமைப்பாளர் டி.இமான்


நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு இனி இசையமைக்க மாட்டேன்- இசையமைப்பாளர் டி.இமான்
x
தினத்தந்தி 17 Oct 2023 1:14 PM IST (Updated: 17 Oct 2023 3:35 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பது நடக்காது என்றும் இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் திரைக்கு அறிமுகமானதில் இருந்து அவருடைய பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் டி.இமான். மனம் கொத்தி பறவை திரைப்படம் தொடங்கி சீமராஜா படம் வரை தன்னுடைய இசையால் சிவகார்த்திகேயன் படங்களுக்கு பக்கபலமாக இருந்தவர் இசையமைப்பாளர் டி.இமான்.

இந்நிலையில் எங்க வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் - டி.இமான் கூட்டணியில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவராத நிலையில், ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் இந்த கூட்டணி எப்போது மீண்டும் அமையும் என்று எதிர்பார்த்து வந்தனர்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் டி.இமான் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய டி.இமான் எப்போது மீண்டும் அந்த கூட்டணி நிகழும் என்ற கேள்விக்கு, இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றும், அவர் செய்த துரோகத்தை மன்னிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், என் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவரே எனக்கு துரோகத்தை செய்யும்போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், என் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இதை பற்றி மேலும் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story