போதைப்பொருள் வழக்கில் நடிகருக்கு சம்மன்


போதைப்பொருள் வழக்கில் நடிகருக்கு சம்மன்
x

பெங்களூருவில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் சித்தாந்த் கபூரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த மாதம் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்தினர். விருந்தில் 35 பேர் இருந்ததாகவும், அவர்களிடம் பரிசோதனை செய்ததில் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அனைவரையும் கைது செய்து ரத்த பரிசோதனை செய்தனர். அதில் 5 பேர் தடை செய்யப்பட்ட கோகைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்தி இருந்தது தெரியவந்தது. கைதானவர்களில் ஒருவர் பிரபல இந்தி நடிகர் சித்தாந்த் கபூர். இவர் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் ஆவார். கைதான அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஓட்டல் ஊழியர்கள் 23 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் சித்தாந்த் கபூரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போதைப் பொருளை சப்ளை செய்தது யார் என்பது குறித்து விசாரிக்க சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story