விஜய்யை சந்தித்த நடிகர் விஷால்


விஜய்யை சந்தித்த நடிகர் விஷால்
x

நடிகர்கள் விஜய்யும், விஷாலும் அரசியலில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இருவரும் திடீரென்று நேரில் சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது விஜய்க்கு விஷால் பூங்கொத்து கொடுப்பதை தவிர்த்து விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழங்கியதற்கான ரசீதை அவரிடம் வழங்கினார்.

பின்னர் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர். விஷால் தான் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தின் டிரெய்லரை விஜய்யிடம் காட்டினார்.

அதை பார்த்து விஜய் பாராட்டினார். அதற்கு நன்றி தெரிவித்த விஷாலிடம் நண்பனுக்காக இதை செய்ய மாட்டேனா என்று விஜய் கூறியது மார்க் ஆண்டனி படக்குழுவினரை நெகிழ வைத்தது.

பின்னர் தனது நீண்ட நாள் விருப்பமான இயக்குனராகும் ஆசை துப்பறிவாளன் 2 படத்தில் நிறைவேறி இருப்பதாகவும் மேலும் தொடர்ந்து படங்கள் இயக்க இருப்பதாகவும் உங்களுக்கும் இரண்டு கதைகள் தயார் செய்துள்ளேன் என்றும் விஜய்யிடம் விஷால் கூறினார். அதற்கு விஜய் 'நீ வா நண்பா நான் இருக்கிறேன். சேர்ந்து பயணிப்போம்' என்று விஷாலிடம் கூறி அவரை உற்சாகப்படுத்தினார்.

மார்க் ஆண்டனி படக்குழுவினர் ஆதிக் ரவிச்சந்திரன், வினோத்குமார், அபிநந்தன், ஹரி கிருஷ்ணன் ஆகியோரும் விஜய்யை சந்தித்தனர்.


Next Story