சினிமா துறையில் நடிகர்-நடிகைகளுக்கு சில பொறுப்புகள் உண்டு - நடிகை டாப்ஸி


சினிமா துறையில் நடிகர்-நடிகைகளுக்கு சில பொறுப்புகள் உண்டு - நடிகை டாப்ஸி
x

நானாக இருந்திருந்தால் ‘அனிமல்’ படத்தில் நடிக்க சம்மதித்து இருக்க மாட்டேன்'' என்று நடிகை டாப்ஸி கூறினார்.

மும்பை,

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தியில் தயாரான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் பெண்களுக்கு எதிரான காட்சிகள் இருந்ததாக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில் 'அனிமல்' படம் குறித்து நடிகை டாப்சி அளித்த பேட்டியில், "நான் 'அனிமல்' போன்ற கதைகளில் நடித்து இருக்க மாட்டேன். சினிமா துறையில் நடிகர்-நடிகைகளுக்கு என்று ஒரு பவர் இருக்கும். மேலும் சில பொறுப்புகளும் இருக்கும். இதற்காக மற்ற நடிகர்கள் இப்படி செய்யாமல் இருந்து இருக்கலாம் என்று நான் சொல்ல மாட்டேன். அது அவர்களுடைய சொந்த விருப்பம். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். பிடித்ததை செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் நானாக இருந்து இருந்தால் 'அனிமல்' படத்தில் நடிக்க சம்மதித்து இருக்க மாட்டேன்'' என்று கூறினார்.


Next Story