நடிகர் சூர்யா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் நடிகை திஷா பதானி மகிழ்ச்சி...!


நடிகர் சூர்யா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் நடிகை திஷா பதானி மகிழ்ச்சி...!
x
தினத்தந்தி 10 Sep 2022 10:25 AM GMT (Updated: 10 Sep 2022 10:38 AM GMT)

பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை,

நடிகர் சூர்யாவின் 42வது படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி இணைந்துள்ளார். இந்த செய்தியை நடிகை பதானி வெள்ளிக்கிழமை சமூக வலைதளம் மூலம் உறுதிப்படுத்தினார்.திஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யா 42 என்ற ஹேஷ்டேக்குடன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் திஷாவின் பதிவு மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் பலரும் அவரது பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் "கோலிவுட்டுக்கு வரவேற்கிறோம்" என்று எழுதினார்,

இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். 'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் 'சூர்யா 42' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது .10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ள படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வடிவில் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தில் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார் திஷா பதானி இது குறித்து அவர் கூறுயதாவது :-

சூரியா மற்றும் சிவா சாருடன் எனது அடுத்த படத்தை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியகிறேன். பெரிய படஜெட் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரமும் மிகவும் தனித்துவமானது, மேலும் நான் இதுவரை நடித்திராத பாத்திரத்தை பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளேன் என கூறினார்.


Next Story