இழந்த பட வாய்ப்புகள் நடிகை ராஷ்மிகா வருத்தம்


இழந்த பட வாய்ப்புகள் நடிகை ராஷ்மிகா வருத்தம்
x

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான், விஜய்யின் வாரிசு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.

சினிமா வாழ்க்கை குறித்து ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில், "கஷ்டப்பட்டு உழைத்தால் எந்த துறையாக இருந்தாலும் நம்பர் ஒன் ஆகலாம். நான் ஆரம்பத்தில் மாடலிங் செய்து பிறகு நடிகையானேன். சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். நான் ஆச்சாரியா, மாஸ்டர் போன்ற படங்களில் நடிக்க இருந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். அவ்வளவு பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் சான்ஸ் வருவது அதிர்ஷ்டம்தான். அந்த வாய்ப்புகளை இழந்தது மிகவும் வேதனையாக இருந்தது. சினிமாவில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. திருமணம், காதல் என்பவை சில நேரங்களில் பிரிக்க முடியாத பந்தமாக ஆகிவிடுகிறது. அது பலவீனத்தையும் ஏற்படுத்தும். நமது லட்சியத்தின் மீது கவனம் வைத்தால் முன்னேறலாம்.

எனக்கு பீரியாடிக்கல் படங்களில் நடிக்க வேண்டும் என்பது கனவு. அதே மாதிரி அப்பாவியான பெண்ணாக நடிக்கவும் ஆசை. இந்த இரண்டு கதாபாத்திரங்களும் கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிக்க சம்மதிப்பேன். மனசுக்குள் ஒன்று வெளியே ஒன்று பேசும் பழக்கம் எனக்கு கிடையாது'' என்றார்.


Next Story