தெலுங்கானா கோர்ட்டில் நடிகை சாய்பல்லவி மனு தள்ளுபடி


தெலுங்கானா கோர்ட்டில் நடிகை சாய்பல்லவி மனு தள்ளுபடி
x

நடிகை சாய்பல்லவி மனுவை தெலுங்கானா கோர்ட்டு நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

காஷ்மீரில் 1990-களில் பண்டிட்கள் மீது நடந்த தாக்குதலை மையமாக வைத்து `தி காஷ்மீர் பைல்ஸ்' என்ற படம் தயாராகி திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்தன. பிரதமர் நரேந்திர மோடியும் படக்குழுவினரை பாராட்டினார். காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த நிலையில் நடிகை சாய்பல்லவி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் இந்தி பண்டிட்கள் தாக்கப்படும் காட்சியையும், இஸ்லாமியர் ஒருவர் மாட்டை கொண்டு சென்றபோது சிலர் தாக்கியதையும் ஒப்பிட்டு இரண்டு சம்பவத்துக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். சாய்பல்லவி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தள் அமைப்பினர் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சாய்பல்லவிக்கு தெலுங்கானா போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது. போலீஸ் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி சாய்பல்லவி தெலுங்கானா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை கோர்ட்டு நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.


Next Story