நடிகை வினோதினி வைத்தியநாதன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்


நடிகை வினோதினி வைத்தியநாதன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
x

நடிகை வினோதினி வைத்தியநாதன் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

சென்னை,

'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வினோதினி வைத்தியநாதன். தொடர்ந்து 'ஓ.கே. கண்மணி', 'அப்பா', ஜிகிர்தண்டா', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்திருந்தார்.

இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இவரது பதிவுகள் ரசிகர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தொண்டர்களிடையே பேசுபொருளாகி இருக்கின்றன.

இந்த நிலையில் நடிகை வினோதினி வைத்தியநாதன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது தொடர்பாக நடிகை வினோதினி டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.




Next Story