மீண்டும் படம் இயக்கும் இசையமைப்பாளர்
‘பூ’, ‘களவாணி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள எஸ்.எஸ்.குமரன் எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்க வருகிறார்.
ஶ்ரீகாந்த் நடித்த 'பூ', விமல் நடித்த 'களவாணி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள எஸ்.எஸ்.குமரன் 'தேநீர் விடுதி', 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். தற்போது எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்க வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ``புதிய படம் டைரக்டு செய்ய கதை தயார் செய்துள்ளேன். இந்தப் படம் 'ஹார்ட் ஸ்டார்' என்ற பெயரில் உருவாகும். இது முழுக்க சினிமா பற்றிய கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். கொரோனா ஊரடங்கில் 170-க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி வைத்துள்ளேன். மாதம் இரண்டு பாடல்களின் ஆடியோ இணைய தளங்களில் வெளியிடப்படும். அதை தேவைப்படுவோர் வாங்கி சினிமாவில் வீடியோ பாடலாக பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.
Related Tags :
Next Story