ஜி.வி.பிரகாசுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்


ஜி.வி.பிரகாசுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
x

ஆனந்த் ரவிச்சந்திரன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாசுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், பிரபல கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதனால் பட வாய்ப்புகளும் குவிகின்றன. நிறைய படங்கள் கைவசம் வைத்து நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது இன்னொரு புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தை `செத்தும் ஆயிரம் பொன்' படத்தை இயக்கி பிரபலமான ஆனந்த் ரவிச்சந்திரன் டைரக்டு செய்கிறார். இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதாகைலாசம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அருண் திரிபுரனேனி, அப்ஷேக் ராம்ஷெட்டி, பிரித்விராஜ் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் கூறும்போது. "இது நல்ல கதை, காதல், குடும்ப செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கொண்ட படமாக தயாராகிறது'' என்றார். ஒளிப்பதிவு: ஜெகதீஷ், சுந்தரமூர்த்தி.

1 More update

Next Story