ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ. 1000 கோடி வசூல் எதிர்பார்ப்பில் 'புஷ்பா 2' படக்குழு


ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ. 1000 கோடி வசூல் எதிர்பார்ப்பில் புஷ்பா 2 படக்குழு
x

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் ‘புஷ்பா 2’ திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது.தற்போது, 'புஷ்பா 2' திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'புஷ்பா 2' ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பான வணிகம் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாநில வெளியீட்டு உரிமமும் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாம். இதுவே, அல்லு அர்ஜுன் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்கிற எதிர்பார்ப்பில் 'புஷ்பா 2' படக்குழுவினர் புரோமோஷன்களை துவங்கியுள்ளனர்.

1 More update

Next Story