'புஷ்பா 2' பட டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு


புஷ்பா 2 பட டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 April 2024 10:32 AM GMT (Updated: 2 April 2024 11:11 AM GMT)

'புஷ்பா 2' பட டீசர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான 8-ம் தேதி வெளியாகிறது.

மும்பை,

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றன.

இந்நிலையில், 'புஷ்பா2' படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திர தோற்றம் குறித்த முதல் புகைப்படம் கசிந்து உள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை 4.05 மணிக்கு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அனேகமாக, அது புஷ்பா - 2 டீசர் தேதியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திலையில் 'புஷ்பா 2' பட டீசர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான 8-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

'புஷ்பா 2' இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Next Story