மாலத்தீவில் மையம் கொண்ட அமலா பால்


மாலத்தீவில் மையம் கொண்ட அமலா பால்
x

சமீப காலமாகவே சர்ச்சையில் சிக்கிவந்த அமலாபால் மாலத்தீவில் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.

சமீப காலமாகவே சர்ச்சையில் சிக்குவது அமலா பாலுக்கு வாடிக்கையாகி விட்டது. அவர் 2-வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. முக்கிய நடிகர் ஒருவருடன் மோதல் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில் சமீபத்தில் அவர் தெலுங்கு சினிமாவை விமர்சித்து சில கருத்துகளை தெரிவித்து பலரது கண்டன பேச்சுகளுக்கு ஆளானார்.

தற்போது அமலாபால் மாலத்தீவில் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். கடலில் குளியல், கடற்கரையில் சூரிய குளியல், ஊர் சுற்றுவது என ஜாலியாக பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார். கடற்கரையில் அவர் எடுத்துக்கொண்ட கலக்கல் கவர்ச்சி புகைப்படங்கள் பரவி வருகிறது. அதைப்பார்த்து "இன்னும் எதிர்பார்க்கிறோம்" என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எந்த பிரச்சினையும் இல்லாமல் இப்போதுதான் நிம்மதியாக இருப்பதாகவும், சிறிது நாட்கள் இந்த நிம்மதி தனக்கு தேவை என்றும் நெருங்கிய நண்பர்களிடம் அமலாபால் தெரிவித்துள்ளாராம். எனவே இந்த 'மைனா' இன்னும் சில நாட்கள் மாலத்தீவில் தான் மையம் கொள்ளப்போகிறது.

1 More update

Next Story