`திரில்லர்' படத்தில் ஆண்ட்ரியா


`திரில்லர் படத்தில் ஆண்ட்ரியா
x

ஆண்ட்ரியா 'நோ எண்ட்ரி' என்ற பெயரில் தயாராகும் `திரில்லர்' கதையம்சம் உள்ள படத்தில் நடிக்கிறார். பிரதாப் போத்தன், ரன்யா ராவ். ஆதவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை அழகு கார்த்திக் டைரக்டு செய்கிறார். ஏ.ஶ்ரீதர் தயாரிக்கிறார். ஒரு காட்டுக்குள் ராணுவத்திற்காக ஆராய்ச்சி செய்யப்போன தன் தந்தையை தேடிபோகிறார் ஆண்ட்ரியா.

அதே போல் வேறு வேறு காரணங்களுக்காக டூரிஸ்டாகவும் சிலர் அந்தக் காட்டுக்குள் வருகின்றனர். அங்கே மரபணு மாற்றப்பட்ட அதிசக்தி வாய்ந்த அழிக்க முடியாத நாய்களிடம் அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த நாய்களின் வேட்டையில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா என்பதே கதை. ரசிகர்களை சீட் நுனியில் இருந்து ரசிக்க வைக்கும் மாறுபட்ட படமாக இருக்கும்'' என்றார் இயக்குனர்.

கமர்ஷியல் திரில்லர் படமாக தயாராகி உள்ளது. மேகாலயாவில் அதிக மழைபெய்யும் சிரபுஞ்சி காடுகளில், பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். ஒளிப்பதிவு: ரமேஷ் சக்கரவர்த்தி.


Next Story