நிர்வாண 'போஸ்' கொடுக்க விரும்பும் இன்னொரு நடிகர்


நிர்வாண போஸ் கொடுக்க விரும்பும் இன்னொரு நடிகர்
x

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நிர்வாண போஸ் கொடுக்க தயார் என்று அறிவித்து உள்ளார்.

கேரளாவில் சில வாரங்களுக்கு முன்பு பள்ளி குழந்தைகள் முன்பு ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவருக்கு மன நோய் இருப்பதால் இப்படி நடந்து கொண்டார் என்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்து ஜாமீன் பெற்றனர். இந்த நிலையில் சில நடிகர்கள் நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்து வலைதளத்தில் வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர். பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் சர்ச்சையானது. பெண்கள் மனதை புண்படுத்தி விட்டதாக அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் அனுப்பும் போராட்டங்கள் நடக்கின்றன.

நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாண புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். அது போட்டோ ஷுட் புகைப்படம் இல்லை என்றும், தூங்கி எழுந்ததும் எடுத்த போட்டோ என்றும் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நிர்வாண போஸ் கொடுக்க தயார் என்று அறிவித்து உள்ளார். சமீபத்தில் லைகர் படத்துக்காக விஜய்தேவரகொண்டா கையில் பூங்கொத்தை வைத்து மறைத்தபடி நிற்கும் நிர்வாண புகைப்படம் வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


Next Story