அண்ணன்-தங்கை பாசத்தை சித்தரிக்கும் இன்னொரு படம்


அண்ணன்-தங்கை பாசத்தை சித்தரிக்கும் இன்னொரு படம்
x

அண்ணன் தங்கை பாசத்தை கருவாக வைத்து, ‘மஞ்சக்குருவி' என்ற படம் தயாராகி வருகிறது.

அண்ணன்-தங்கை பாசத்தை கருவாக கொண்ட பாசமலர், தங்கைக்காக, அண்ணன் ஒரு கோவில், என் தங்கச்சி படிச்சவ, தங்கைக்கோர் கீதம், கிழக்கு சீமையிலே படங்களின் வரிசையில், அண்ணன் தங்கை பாசத்தை கருவாக வைத்து, 'மஞ்சக்குருவி' என்ற படம் தயாராகி வருகிறது.

அண்ணனாக கிஷோர் நடிக்க, தங்கையாக நீரஜா நடித்து வருகிறார். சவுந்தர்யன் இசையில் தங்கையை நினைத்து அண்ணன் பாடும் பாடல், கல்நெஞ்சத்தையும் உருகவைக்கும். 'கூடப் பொறந்த பொறப்பே...' என்று தொடங்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளர் சவுந்தர்யனே பாடியுள்ளார்.

விமலா ராஜநாயகம் தயாரித்துள்ள இந்த படத்தில் கிஷோர் கதை நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக குங்பு மாஸ்டர் ராஜநாயகம் நடித்திருக்கிறார் விஸ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு மற்றும் பலரும் நடித்துளனர்.

கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன், அரங்கன் சின்னத்தம்பி.

"சூப்பர் ஹிட் பாடல்களுடன் படத்தை விரைவில் திரையில் பார்க்கலாம்" என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.


Next Story