வெப் தொடரில் அனுமோல்


வெப் தொடரில் அனுமோல்
x

அயலி என்ற பெயரில் தயாராகி உள்ள வெப் தொடரில் தமிழ், மலையாள பட உலகில் பிரபல நடிகையாக இருக்கும் அனுமோல் மற்றும் அபி நட்சத்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீப காலமாக வெப் தொடர்கள் அதிகம் தயாராகின்றன. முன்னணி நடிகர் நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். இந்த நிலையில் அயலி என்ற பெயரில் தயாராகி உள்ள வெப் தொடரில் தமிழ், மலையாள பட உலகில் பிரபல நடிகையாக இருக்கும் அனுமோல் மற்றும் அபி நட்சத்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி ஆகியோரும் இதில் நடித்து இருக்கிறார்கள்.

பெண்கள் படித்து முன்னேறுவதை தடுக்கும் வகையில் பழங்கால பழக்க வழக்கங்களை கடைபிடிக்க தவறினால் அயலி தெய்வம் கோபமடைந்து கிராம மக்களுக்கு சாபம் கொடுத்து விடும் என்று கிராமத்தினரை மிரட்டி பயமுறுத்தும் வில்லன் கும்பலையும், மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராடும் ஒரு இளம் பெண்ணை பற்றிய கதையம்சத்தில் தயாராகி உள்ளது. இந்த தொடரை முத்துக்குமார் இயக்கி உள்ளார்.


Next Story