மனைவி, மகள்களுடன் கொண்டாடிய அர்ஜுன்


மனைவி, மகள்களுடன் கொண்டாடிய அர்ஜுன்
x

அர்ஜுன் தனது பிறந்த நாளை மனைவி, மகள்களுடன் கொண்டாடினார்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த அர்ஜுன் தற்போது வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர் கன்னட படங்களில் நடித்த நிவேதிதாவை 1988-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஐஸ்வர்யா பட்டத்து யானை படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் சில படங்களில் நடித்துள்ளார். இளைய மகள் அஞ்சனாவும் சினிமாவில் நடிக்க வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் அர்ஜுன் தனது பிறந்த நாளை மனைவி, மகள்களுடன் கொண்டாடினார். இந்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகிறது. அர்ஜுனுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

அர்ஜுன் தற்போது லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

1 More update

Next Story