அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு


அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
x

பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, 'வணங்கான்' திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story