வில்லனாக விரும்பும் அசோக் செல்வன்


வில்லனாக விரும்பும் அசோக் செல்வன்
x

சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவரான அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து கிராமத்து கதையிலும் வில்லனாகவும் நடிக்க விரும்புகிறார். இதுகுறித்து அசோக் செல்வன் அளித்துள்ள பேட்டியில், "நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து நிறைய கஷ்டப்பட்டுள்ளேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். நித்தம் ஒரு வானம் படமே மூன்று பாத்திரங்கள் என்று நினைத்து தான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுகள் மனதிற்கு சந்தோஷத்தை தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்ய உள்ளேன். கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென ஆசை இருக்கிறது. விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம். சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது. அதற்கான கதையை எதிர்பார்க்கிறேன்'' என்றார்.


Next Story