சினேகா படத்துக்கு விருது


சினேகா படத்துக்கு விருது
x

அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகா நடித்துள்ள ‘ஷாட் பூட் த்ரி’ என்ற தமிழ் படத்திற்கு சிறந்த படத்துக்கான விருதுக்கு தேர்வாகி உள்ளது.

தென் கொரியாவில் உள்ள சியோலில் 'ஐ.சி.ஏ.எப்.எப்' என்ற சர்வதேச திரைப்பட விழா நடந்தது. விலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் திரைப்பட விழாவாக இதை நடத்தினர். பல்வேறு நாடுகளில் செல்லப் பிராணிகளை மையமாக வைத்து தயாரான படங்கள் இந்த பட விழாவில் திரையிடப்பட்டன. இதில் அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, ஷிவாங்கி ஆகியோர் நடித்துள்ள 'ஷாட் பூட் த்ரி' என்ற தமிழ் படமும் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதுக்கு தேர்வாகி உள்ளது. 2016-ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் முதல் தடவையாக ஒரு இந்திய படம் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கும், நாய்களுக்கும் உள்ள உறவை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர்.

1 More update

Next Story