விருது பெற்ற தாத்தா, பேரன் பாச உறவு படம்


விருது பெற்ற தாத்தா, பேரன் பாச உறவு படம்
x

‘கிடா' என்ற பெயரில் தயாரான புதிய படம் சென்னை திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது என டைரக்டர் ரா.வெங்கட் தெரிவித்துள்ளார்.

'கிடா' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் பூ ராம், காளி வெங்கட், பாண்டியம்மாள், லோகி, கமலி, தீபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரா.வெங்கட் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``தீபாவளிக்கு ஒரு தாத்தா தனது பேரனுக்கு டிரெஸ் எடுத்துக் கொடுக்க கையில் பணம் இல்லாமல் கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்டை விற்க முடிவு செய்கிறார். அதை உள்ளூர்காரர்கள் வாங்க மறுக்க, குடிகாரரான காளி வெங்கட்டுக்கு விலை பேசி கொடுக்க முடிவு செய்கிறார். அப்போது ஆடு காணாமல் போகிறது. அது கிடைத்ததா என்பது கதை. தாத்தா, பேரன் பாச உறவு முறையை படம் பேசும். இந்தப் படம் சென்னை திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது'' என்றார். ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு எம்.ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை: தீசன்.

1 More update

Next Story