கவின் ஜோடியாக 'அயோத்தி' நாயகி


கவின் ஜோடியாக அயோத்தி நாயகி
x

'டாடா' பட வெற்றிக்குப் பிறகு கவின் கதா நாயகனாக நடிக்க உள்ள புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கவின் ஜோடியாக சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற `அயோத்தி' படத்தில் நாயகியாக வந்த பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் பல நடிகர்- நடிகைகள் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கி டைரக்டராக அறிமுகமாகிறார். இவர் டான்சராக திரையுலகில் நுழைந்து நடன இயக்குனராகி படங்களில் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கவின் படம் மூலம் இயக்குனராகி உள்ளார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கவின் படத்துக்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும். இளைஞர்களைக் கவரும் வகையில் இன்றைய தலைமுறையின் கதையை சொல்லும் கமர்ஷியல் படமாக உருவாவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். படப் பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடிக்கிறது. ஒளிப்பதிவு: ஹரீஷ். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.


Next Story