விஜய்யுடன் நடிக்கும் பகத் பாசில்?


விஜய்யுடன் நடிக்கும் பகத் பாசில்?
x

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67-வது படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் விஜய்யுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பட வேலைகள் தொடங்கி உள்ளது. இது விஜய்க்கு 67-வது படம். இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை விவரங்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இதில் சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கதாநாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் விஜய்யுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் படத்தில் நடிக்கிறீர்களா என்று பகத் பாசிலிடம் கேட்டபோது, அந்த படத்தில் நானும் இருக்கலாம் என்று கூறியுள்ளார். பகத் பாசில் ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து இருந்தார். விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் இருந்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் பகத் பாசில் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.


Next Story