உலகமயம், தொழில்நுட்பம் என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும் தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன - வைரமுத்து


உலகமயம், தொழில்நுட்பம் என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும் தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன - வைரமுத்து
x

சரித்திரத்தின் பூகோளத்தின் ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை,

தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று உலகத் தாய்மொழித் திருநாள். வாழ்த்து அச்சம் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறேன். தாய் என்ற அடைமொழிகொண்ட சொற்களெல்லாம் உயர்ந்தவை; உலகத் தன்மையானவை மற்றும் உயிரோடும் உடலோடும் கலந்தவை. தாய்நாடு, தாய்ப்பால், தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள்.

ஆனால், உலகமயம், தொழில்நுட்பம் என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும் தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன. உலக தேசிய இனங்கள் விழிப்போடிருக்கவேண்டிய வேளை இது. அரசு, ஆசிரியர், பெற்றோர், மாணவர், ஊடகம் என்ற ஐம்பெரும் கூட்டணிகளால் மட்டுமே இந்தப் பன்னாட்டுப் படையெடுப்பைத் தடுக்கமுடியும்.

சரித்திரத்தின் பூகோளத்தின் ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும். எங்கள் தாய்மொழி எங்கள் அடையாளம் மற்றும் அதிகாரம்" என்று தெரிவித்து உள்ளார்.


1 More update

Next Story