கதாநாயகர்களால் சினிமா இல்லை - டைரக்டர் அமீர்


கதாநாயகர்களால் சினிமா இல்லை - டைரக்டர் அமீர்
x

சினிமாவுக்கு டைக்ரடர்கள்தான் முக்கியம் கதாநாயகர்களால்தான் சினிமா என்ற பிம்பத்தை உடைக்க விரும்புகிறேன் என டைரக்டர் அமீர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பல படங்கள் இயக்கி முன்னணி டைரக்டராக இருக்கும் அமீர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள 'உயிர் தமிழுக்கு' படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார்.

அமீர் அளித்துள்ள பேட்டியில். நான் "தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருடம் ஆகிவிட்டது. இது ஒரு சாதனை தான். சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் உயிர் தமிழுக்கு என்ற தலைப்பு தற்போது அவசியமாகிறது.

நான் எப்போதும் கதையின் நாயகனாகத்தான் இருப்பேன். சினிமாவுக்கு டைக்ரடர்கள்தான் முக்கியம். கதாநாயகர்களால்தான் சினிமா என்ற பிம்பத்தை உடைக்க விரும்புகிறேன். டைரக்டர்களே.... கதையின் நாயகர்களாகவே இருக்க வேண்டும்.

பான் இந்தியா படங்கள் என்கிற கலாசாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின.

கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியா படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்" என்றார்.


Next Story