மகாகாளீஸ்வர் வழிபாட்டு தலத்தில் கணவர் விராட் கோலியுடன் நடிகை அனுஷ்கா சர்மா வழிபாடு...!

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் மகாகாளீஸ்வர் வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்தனர்.
போபால்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவரது மனைவி இந்தி நடிகை அனுஷ்கா சர்மா. இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், அனுஷ்கா சர்மாவும் அவரது கணவர் விராட் கோலியும் இன்று மத்தியபிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான மகாகாளீஸ்வர் வழிபாட்டு தலத்திற்கு சென்றனர்.
அங்கு மகாகாளீஸ்வர் கடவுளை அனுஷ்கா - விராட் கோலி தம்பதி வழிபாடு செய்தனர். வழிபாடு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அனுஷகா, நாங்கள் இங்கு தரிசனம் செய்ய வந்தோம், தரிசனம் சிறப்பாக இருந்தது' என்றார். அப்போது பேசிய கோலி, ஜெய் மகாகாளிஸ்வர்.. மிக்க நன்றி' என்றார்.
Related Tags :
Next Story






