திருப்பதி கோவிலில் பிரபாஸ் தரிசனம்


திருப்பதி கோவிலில் பிரபாஸ் தரிசனம்
x

பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அந்த படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக வெளியாகி வருகின்றன.

பிரபாஸ் நடிப்பில் வந்த சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. தற்போது ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் நடித்து இருக்கிறார். இதில் சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

ரூ.600 கோடி செலவில் தயாராகி உள்ள ஆதிபுருஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் விரைவில் திரைக்கு வர உள்ளது.. இந்த நிலையில் பிரபாஸ் நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்றார். அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை வழிபட்டார். பிரபாசுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த பிரபாசை காண ரசிகர்கள் திரண்டனர். அவர்களை பார்த்து கையசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story