தேவர் மகன் 2-ம் பாகம்: கமல்ஹாசன் படத்தை கைவிட முடிவா?
கமல்ஹாசன் வேறு படங்களில் தீவிரமாக நடிப்பதால் தேவர் மகன் 2-ம் பாகம் படத்தை கைவிட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.
கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்த நிலையில் அடுத்து நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட 'இந்தியன்-2' படத்தில் மீண்டும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என்று மூன்று நாயகிகள் இதில் நடிக்கின்றனர். ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர். அதன் பிறகு தற்போது அஜித்தை வைத்து துணிவு படத்தை எடுத்துள்ள வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பா.ரஞ்சித், வெற்றி மாறன் ஆகியோரும் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க காத்து இருக்கிறார்கள். ஏற்கனவே மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் டைரக்டு செய்யும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்று அறிவித்து இருந்தனர். இது தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் வேறு படங்களில் தீவிரமாக நடிப்பதால் தேவர் மகன் 2-ம் பாகம் படத்தை கைவிட படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.