'ராயன்' படத்தின் முதல் பாடல் - அப்டேட் கொடுத்த படக்குழு


ராயன் படத்தின் முதல் பாடல் - அப்டேட் கொடுத்த படக்குழு
x

நடிகர் தனுஷின் 'ராயன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50-வது படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் தேர்தலுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டனர். தற்பொழுது படத்தின் பெரிய அப்டேட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

படத்தின் முதல் பாடல் வரும் மே 9-ம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர் அதில் தனுஷ் நெருப்பில் எரியும் கற்கள் மீது உட்கார்திருக்கிறார். அவருக்கு பின் 10 தலைக்கொண்ட ராவணன் உருவசிலை இருக்கிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


Next Story