ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' வீடியோ பாடல் வெளியீடு


ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்துள்ளார்.

வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் துஷாரா விஜயனின் 'துர்கா' கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படம் 'ஏ' சான்றிதழுடன் திரைக்கு வந்து முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ராயன் படத்தின் திரைக்கதை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் ராயன் திரைப்படத்திற்கு தான் அதிகம். தனுஷ் நடித்த படங்களிலே ராயன் அதிகம் வசூலித்த படமாகும். 2024 ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது.

ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா முரளி இடையே உள்ள காதல் மிக அழகாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இவர்கள் வரும் காட்சிகளுக்கு விசில் பறக்கிறது. முக்கியமாக இவர்கள் ஆடிய 'வாட்டர் பாக்கெட்' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

1 More update

Next Story