நடிகர் புகழ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி


நடிகர் புகழ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 24 March 2024 3:16 PM GMT (Updated: 24 March 2024 4:31 PM GMT)

'டைமண்ட் தோனி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் புகழ் என்பதும் குறிப்பாக 'குக் வித் கோமாளி' 'காமெடி ராஜா கலக்கல் ராணி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

'கைதி' 'சபாபதி' 'வாய்மை' 'யானை' உள்ளிட்ட படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த புகழ் 'ஆகஸ்ட் 16 1947' என்ற படத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அதன் பின்னர் தற்போது 'மிஸ்டர் ஜு கீப்பர்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவி புகழ் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'டைமண்ட் தோனி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜோஜின் என்பவர் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை டைமண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. அபிஷேக் என்பவர் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story