3 கதாநாயகிகள் வேண்டும் என்று கேட்டேனா? அசோக் செல்வன் விளக்கம்


3 கதாநாயகிகள் வேண்டும் என்று கேட்டேனா? அசோக் செல்வன் விளக்கம்
x

‘நித்தம் ஒரு வானம்‘ படத்தில் 3 கதாநாயகிகள் இருந்தால்தான் நடிப்பேன் என்று இயக்குனரை நான் நிர்ப்பந்திப்பதாக வந்த தகவல் உண்மை இல்லை என அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ஓ மை கடவுளே திருப்புமுனை படமாக அமைந்து. தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ரிது வர்மா, அனுபமா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகிய 3 நாயகிகள் உள்ளனர். ரா. கார்த்திக் டைரக்டு செய்துள்ளார். அசோக் செல்வன் அளித்துள்ள பேட்டியில், ''நான் காதல் கதையம்சம் உள்ள படங்களில் நிறைய நடித்து விட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தேன். இந்த நிலையில் நித்தம் ஒரு வானம் கதையை சொன்னதும் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். இதில் 3 கதைகள் மற்றும் எனக்கு வித்தியாசமான 3 தோற்றங்கள் உள்ளன. இந்த படம் பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்தும். எனக்கு கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடிக்க ஆர்வம் இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறி உள்ளது. எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால்தான் நடிப்பேன் என்று இயக்குனரை நான் நிர்ப்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அது தானாக அமைந்துவிடுகிறது. ஓ மை கடவுளே படத்தின் 2-ம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்" என்றார்.


Next Story