அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய டைரக்டர் டி.ராஜேந்தர்


அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய டைரக்டர் டி.ராஜேந்தர்
x

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து டைரக்டர் டி.ராஜேந்தர் சென்னை திரும்பினார்.

பிரபல டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய் வால்வில் சிறிய அடைப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு டி.ராஜேந்தருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நலம் தேறியது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாக அமெரிக்காவிலேயே தங்கி ஓய்வு எடுத்தார். பூரண குணமடைந்த நிலையில் நேற்று அதிகாலை அமெரிக்காவில் இருந்து குடும்பத்தினருடன் சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய டி.ராஜேந்தரை ரசிகர்கள் வரவேற்றனர். பின்னர் டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கூறும்போது, ''நான் இந்த இடத்தில் நிற்பதற்கு கடவுள் நம்பிக்கைதான் காரணம். என் மீது அன்பு வைத்துள்ள தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. நான் சென்னையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்பினேன். எனது மகன் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொள்ளளும்படி கூறியதால் அங்கு சென்றேன். எனக்கு சிகிச்சை நல்ல விதத்தில் முடிந்து பழைய உணர்வோடும், தெம்போடும் தாய்மண்ணுக்கு வந்துள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்றார்.


Next Story