விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து


விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து
x

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ‘வாரிசு' படத்தின் முதல் ‘சிங்கிள் டிராக்' பாடல் தீபாவளி தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் விஜய்யின் 67-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட இருக்கிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் 'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

பொதுவாகவே தீபாவளி தினத்தன்று விஜய் படம் வெளியாவது வழக்கம். ரசிகர்களும் திருவிழா போல கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு விஜய் படம் வெளியாகவில்லை. 'வாரிசு' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தனது ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு தர வேண்டும் என விஜய் முடிவு செய்தார். அதன்படி 'வாரிசு' படத்தின் முதல் 'சிங்கிள் டிராக்' பாடல் தீபாவளி தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் விஜய்யின் 67-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட இருக்கிறது.

தீபாவளி பண்டிகைக்கு விஜய் படம் வரவில்லையே என்று வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு இந்த தகவல் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது.


Next Story