தனுசுடன் என்னை ஒப்பிட வேண்டாம் - நடிகர் பிரதீப் ரங்கநாதன்


தனுசுடன் என்னை ஒப்பிட வேண்டாம் - நடிகர் பிரதீப் ரங்கநாதன்
x

தனுசுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தில் வரும் மாமா குட்டி வசனம் பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது. தற்போது இன்னொரு படத்திலும் நாயகனாக நடிக்கிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, "லவ் டுடே' படத்தில் மாமா குட்டி என்று ஒரு விஷயத்தை சொல்லி இருப்பேன். உண்மையிலேயே நம்மை சுற்றி நிறைய மாமா குட்டிகள் இருக்கிறார்கள். எக்ஸ் பாய்பிரண்ட், எக்ஸ் கேர்ள் பிரண்ட் இல்லாதவர்களே இப்போது கிடையாது. எனவே எல்லாருமே கிட்டத்தட்ட மாமா குட்டிகள் தான்.

நான் பேசுவது, எனது செயல்பாடுகள், எனது நடவடிக்கை எல்லாமே நடிகர் தனுஷ் போல இருப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அது உண்மையா? என்று எனக்கு தெரியவில்லை. என்னை பொறுத்தவரை நான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை.

நான் தனுஷ்போல் இருப்பதாக ஒப்பிட்டு பேசுவது தவறு என்று நினைக்க தோன்றுகிறது. அவர் எங்கேயோ இருக்கிறார். நான் இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன்" என்றார்.

1 More update

Next Story