பிரபல நடிகர் மரணம்


பிரபல நடிகர் மரணம்
x

பிரபல இந்தி நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி உடல்நிலைகுறைவால் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.

பிரபல இந்தி நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டார். நுரையீரல் செயல் இழந்தது. மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜாவேத் கான் அம்ரோஹி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. பழம்பெரும் நடிகரான ஜாவேத் கான் அம்ரோஹி 1980-களில் தூர்தர்ஷனில் பெரிய வரவேற்பை பெற்ற 'நுக்கத்' நகைச்சுவை தொடரில் நடித்து பிரபலமானார்.

இந்தியில் வெற்றி பெற்ற அமீர்கானின் லகான், ஷாருக்கானின் சக் தே இந்தியா ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றார். அந்தாஸ் அப்னா, கூலி நம்பர் 1, ஹம் ஹைன் ரஹி பியார் கே போன்ற வெற்றி பெற்ற படங்களில் ஜாவேத் கான் நடிப்பு பலராலும் பேசப்பட்டது. இந்தியில் 150 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். ஜாவேத் கான் அம்ரோஹி மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


Next Story