பிரபல நடிகை சிறை வைப்பு - போலீசில் புகார்


பிரபல நடிகை சிறை வைப்பு - போலீசில் புகார்
x

தனியார் தொலை தொடர்பு நிறுவன அலுவலகத்தில் தன்னை சிலர் அறைக்குள் அடைத்து சிறை வைத்ததாக அன்னா ராஜன் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

பிரபல மலையாள நடிகை அன்னா ராஜன். இவர் நடித்த அங்கமாலி டைரிஸ் படம் பெரிய வெற்றி பெற்றது. மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் படங்களிலும் நடித்து இருக்கிறார். திருமலி என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அன்னா ராஜன் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுகிறார். இதனால் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். சில ரசிகர்கள் அவரது கவர்ச்சி புகைப்படங்களை வர்ணித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தன்னை சிலர் அறைக்குள் அடைத்து சிறை வைத்ததாக அன்னா ராஜன் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அலுவா போலீசில் அன்னா ராஜன் அளித்துள்ள புகார் மனுவில், "நான் அலுவா நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் தொலை தொடர்பு நிறுவன அலுவலகத்துக்கு புதிய சிம்கார்டு வாங்க சென்று இருந்தேன். அங்கிருந்த அலுவலக ஊழியர்களுக்கும், எனக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு ஆண் ஊழியர் என்னை அங்குள்ள அறையில் சிறை வைத்து வெளியே பூட்டி விட்டார்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இரு தரப்பினருக்கும் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


Next Story