நடிகை இலியானாவை கேலி செய்த ரசிகர்கள்


நடிகை இலியானாவை கேலி செய்த ரசிகர்கள்
x

நடிகை இலியானாவை வலைத்தளத்தில் ரசிகர்கள் கேலி செய்து பதிவுகள் வெளியிடுகிறார்கள்.

தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ள இலியானா இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே மளமளவென உயர்ந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடி சேர்ந்தார். காதலில் சிக்கி தோல்வி அடைந்த பிறகு அவரது உடல் எடை கூடியது. பட வாய்ப்புகளும் குறைந்தன. நாள் முழுவதும் ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்தும், உணவு கட்டுப்பாடு இருந்தும் ஓரளவு எடையை குறைத்தார். சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைத்தளத்தில் தினமும் தன்னுடைய ஏதாவது ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வந்தார். ஆனாலும் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் இலியானாவை கண்டு கொள்ளவில்லை. முகத்தில் முன்பிருந்த பொலிவு இல்லாததால் பட வாய்ப்புகள் வரவில்லை என்கின்றனர். தற்போது கடற்கரையில் எடுத்த நீச்சல் உடை புகைப்படங்களை வலைத்தளத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவற்றை பார்த்த ரசிகர்கள் திருமணமும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம். பீச்சில் நீச்சல் உடையில் மட்டும் இருந்தால் போதுமா? என்றெல்லாம் கண்டித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிடுகிறார்கள். இது வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.

1 More update

Next Story