நடிகை அம்மு அபிராமி பெயரில் மோசடி


நடிகை அம்மு அபிராமி பெயரில் மோசடி
x

ஒரு ஆசாமி அம்மு அபிராமியின் யூடியூப் சேனல் லோகோவை அப்படியே காப்பியடித்து போலியாக ஒரு சேனலை ஆரம்பித்துள்ளார்.

விஜய்யின் 'பைரவா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. 'தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், அசுரன்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். அம்மு அபிராமி யூடியூப்பில் புதிய சேனல் தொடங்கி தனது வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில் ஒரு ஆசாமி அம்மு அபிராமியின் யூடியூப் சேனல் லோகோவை அப்படியே காப்பியடித்து போலியாக ஒரு சேனலை ஆரம்பித்துள்ளார். அதை உண்மை என்று பின்தொடர்ந்த ஒருவரிடம் உங்களுக்கு ஐபோன் பரிசு விழுந்துள்ளது, அதை அனுப்பி வைக்க டெலிவரி கட்டணம் ரூ.5 ஆயிரம் அனுப்புங்கள் என்று அம்மு அபிராமி கேட்பதுபோல் கேட்டு இருக்கிறார்.

அதை உண்மை என்று நம்பி அந்த ரசிகரும் பணம் அனுப்பி உள்ளார். ஆனால் ஐபோன் வரவில்லை. தான் ஏமாந்த விவரத்தை அம்மு அபிராமியிடம் ரசிகர் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து அம்மு அமிராமி வெளியிட்ட வீடியோவில் ''எனது பெயரில் நடந்துள்ள மோசடி அறிந்து அதிர்ச்சியானேன். இதுபோன்று அடுத்தவர்கள் காசை அடிக்கும் கேவலமான செயலை செய்யாதீர்கள். நான் பரிசுபொருள் அறிவிப்பது இல்லை. இதுபோல் யாரும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.

இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story