நடிகர் தனுசை சந்தித்த ஜெனிலியா, பிரியாமணி


நடிகர் தனுசை சந்தித்த ஜெனிலியா, பிரியாமணி
x

மும்பை சென்றுள்ள நடிகர் தனுசை நடிகைகள் பிரியாமணி, ஜெனிலியா ஆகியோர் சந்தித்து பேசினர்.

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்து வாத்தி படத்தில் கவனம் செலுத்துகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். வெங்கி அல்லூரி இயக்குகிறார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் மும்பை சென்றுள்ள நடிகர் தனுசை நடிகைகள் பிரியாமணி, ஜெனிலியா ஆகியோர் சந்தித்து பேசினர்.அப்போது இந்தி நடிகரும், ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக்கும் இருந்தார். தனுசுடன் உத்தம புத்திரன் படத்தில் ஜெனிலியாவும், அது ஒரு கனாக்காலம் படத்தில் பிரியாமணியும் ஜோடியாக நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 பேரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story